தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க இருக்கின்ற நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க இருக்கின்ற நிலையில் ஆந்திர கடலோர பகுதிகளில் நிலவும் காற்றழுத்த பகுதி காரணமாக கடந்த இரண்டு நாட்களாக பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து கொண்டிருக்கிறது. இந்த சூழலில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ராமச்சந்திரன் பேசிய போது, தென்மேற்கு பருவ மழையை விட வடகிழக்கு பருவமழையை சிறப்பாக எதிர் கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது வழக்கத்தை விட கூடுதலாக 35 முதல் 75 சதவீதம் வரை மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் வானிலை ஆய்வு மையத்தில் எச்சரிக்கையை தொடர்ந்து விரைவாக முன்னெச்சரிக்கை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது இந்திய வானிலை ஆய்வு மையத்துடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கின்றோம். மேலும் 1400 இடங்களில் மழை அளவிடும் கருவிகள் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் தமிழகம் முழுவதும் பேரிடர் மீட்பு குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கிறது மழையால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் மழை பாதிப்பு ஏற்பட்டால் நிவார முகாம்களின் மக்களை தங்க வைப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நிவாரண முகங்களில் தங்கும் மக்களுக்கு தேவையான உணவுகளும் வழங்கப்படும்.