முதுநிலை படிப்பிற்கான விண்ணப்ப பதிவு இன்று தொடங்கியுள்ளது.
தமிழ்நாட்டில் அமைந்துள்ள அனைத்து கல்வியல் கல்லூரிகளில் முதுநிலை படிப்பில் சேர்வதற்கான விண்ணப்ப பதிவு இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகள், சுயநிதி கல்வியியல் கல்லூரிகளில் பி.எட் படிப்பதற்கான விண்ணப்ப பதிவு கடந்த மாதம் 24 -ஆம் தேதி இணையவழியில் தொடங்கியது. இதற்கான தரவரிசை பட்டியல் வியாழன் கிழமை வெளியாகும் என கல்லூரி இயக்கம் அறிவித்தது.
தற்போது முதுநிலை கல்வியல் படிப்புக்கான எம்.எட் மாணவர்கள் சேர்க்கை தொடங்கியுள்ளது. இந்நிலையில் WWW.tngasaedu .org என்ற இணையதளத்தின் மூலம் வருகின்ற 12-ஆம் தேதி வரை விண்ணப்பித்துக் கொள்ளலாம். அதன் பின்னர் 15-ஆம் தேதி தரவரிசையில் பட்டியல் வெளியிடப்படுகிறது. இந்நிலையில் முதுநிலை படிப்புகளுக்கான கலந்தாய்வு 18-ஆம் தேதி தொடங்கும் என கல்லூரி கல்வி இயக்கம் தெரிவித்துள்ளது.