Categories
உலக செய்திகள்

குழந்தைகள் பராமரிப்பு மையத்தில் துப்பாக்கிச் சூடு… 31 பேர் உயிரிழப்பு… பெரும் சோகம்…!!!!!

தாய்லாந்தில் குழந்தைகள் பராமரிப்பு மையத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 31 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தாய்லாந்து வடகிழக்கு மாகாணத்தில் உள்ள குழந்தைகள் பராமரிப்பு மையத்தில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் 31 பேர் உயிரிழந்திருக்கின்றனர். குழந்தைகள் பராமரிப்பு மையத்தில் இன்று நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் என 31 வரை உயிரிழந்திருக்கின்றனர். மேலும் பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குழந்தைகள் பராமரிப்பு மையத்தில் புகுந்த மர்ம நபர் அங்கிருந்த பிஞ்சு குழந்தைகள் மற்றும் ஆசிரியர்கள், ஊழியர்கள் போன்றோர் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி உள்ளனர். இந்த நிலையில் அந்த நபர் முன்னாள் போலீஸ் அதிகாரி என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த கொடூர சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளியை உடனடியாக கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து துறைகளையும் தாய்லாந்து பிரதமர் அறிவுறுத்தியுள்ளார்.

Categories

Tech |