Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

அமேந்திர பாகுபலி..!…. ”கலக்கும் ட்ரம்ப்’ …. வைரலாகும் வீடியோ

அமெரிக்க அதிபர் டொனால்ட்  ட்ரம்ப் இரண்டு நாள் பயணமாக நாளை குஜராத் மாநிலம் அகமதாபாத்திற்கு வருகிறார். 

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நாளை ( 24 , 25 ) என இரு நாட்கள் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். 2015ஆம் ஆண்டு இந்தியா வந்த ஒபாமாவுக்கு பிறகு 5 ஆண்டு கழித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வர இருப்பதால் அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு கொடுப்பதற்காக குஜராத் தயாராகியிருக்கிறது.

அமெரிக்கா அதிபர் வருகையையொட்டி அகமதாபாத் , குஜராத் என பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டதோடு டிரம்ப்க்கு வரவேற்பு கொடுக்கும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிக்கு திட்டமிடப்பட்டுள்ளது.மேலும் இந்தியா வரும் ட்ரம்ப்பை வரவேற்கும் வகையில் நெட்டிசன்கள் பலரும் மீம்ஸ் பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் அதிபர் ட்ரம்ப் முகத்தை பாகுபலி பட காட்சியோடு மார்பிங் செய்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது. இந்த வீடியோவை அதிபர் டிரம்ப் தனது ட்வீட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Categories

Tech |