பிரிட்டன் நாட்டின் மன்னராக இருக்கும் சார்லஸின் முதல் காதல் குறித்த சுவாரஸ்ய தகவல் வெளியாகி உள்ளது.
பிரிட்டன் நாட்டின் மன்னரான சார்லஸை கமீலாவிற்கு அறிமுகப்படுத்தி வைத்தது அவரின் முன்னாள் காதலி என்று தெரியவந்துள்ளது. சிலி நாட்டை சேர்ந்த, Lucia Santa Cruz என்பவரை தான் சார்லஸ் முதலில் காதலித்திருக்கிறார். இருவருக்கும் காதல் மலர வரலாற்றின் மீது அவர்களுக்கு இருந்த ஆர்வம் தான் காரணமாம்.
சார்லஸ் தன் தாயாரிடமும், Lucia Santa Cruz-ஐ அறிமுகப்படுத்தியிருக்கிறார். எனினும் இரண்டு பேரும் வெவ்வேறான சபை பிரிவுகளை சேர்ந்தவர்கள். இதனால் அவரை திருமணம் செய்தால் சார்லஸிற்கு மன்னர் பதவி கிடைக்காது என்ற காரணத்தால் இந்த காதல் தொடக்கத்திலேயே முறிந்து போனது.
காதல் முறிந்தாலும் இருவரும் நல்ல நண்பர்களாக இருந்திருக்கிறார்கள். 1970 ஆம் வருடத்தில் Lucia Santa Cruz, தன் வீட்டில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சிக்கு சார்லஸை அழைத்திருக்கிறார். அந்த நிகழ்ச்சிக்கு கமீலாவும் வந்திருந்தார். அங்கு தான் மன்னர் சார்லஸ் கமீலாவை முதல் தடவையாக பார்த்துள்ளார்.
அதன் பிறகு, Lucia Santa Cruz பல்கலைக்கழக பேராசிரியர் ஆனார். பல்வேறு புத்தகங்களை எழுதிய அவர் தேசிய தொலைக்காட்சி இயக்குனராக இருந்த Juan Luis Ossa-ஐ திருமணம் செய்து கொண்டு, 3 பிள்ளைகள் பெற்றெடுத்தார். அதன் பிறகு தன் 77 வது வயதில் உயிரிழக்கும் வரை மன்னர் சார்லஸ் மற்றும் கமீலாவிற்கு சிறந்த நண்பராக இருந்திருக்கிறார்.