Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே…. புயல் வந்தாலும் எதிர்கொள்ள தயார்….. அமைச்சர் அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது.தமிழகத்தில் இன்று முதல் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்துள்ள நிலையில் இந்த மாதம் வடகிழக்கு பருவ மழை தொடங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து பேசிய அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர். ராமசந்திரன் , வடகிழக்கு பருவமழை இயல்பை விட கூடுதலாக பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதால் மாநில பேரிடர் மீட்பு குழு தயார் நிலையில் உள்ளது என தெரிவித்துள்ளார். நிவாரண முகாம்களின் தங்க வைப்பதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறியவர் புயல் வந்தாலும் அதனை எதிர்கொள்ள அரசு தயார் நிலையில் உள்ளதாக தெரிவித்துள்ளார். அமைச்சரின் இந்த அறிவிப்பு மக்கள் மத்தியில் சற்று நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |