Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

விபத்தில் சிக்கி வேட்டை தடுப்பு காவலர் பலி….. பிறந்தநாளில் நடந்த சோகம்…. கதறும் குடும்பத்தினர்….!!

விபத்தில் சிக்கி வேட்டை தடுப்பு காவலர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மானாம்பள்ளி வனச்சரகத்தில் சாலமோன்(35) என்பவர் வேட்டை தடுப்பு காவலராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் பெண் குழந்தை இருக்கின்றனர். நேற்று முன்தினம் சாலமோனுக்கு பிறந்தநாள். இதனால் நல்லமுடி பகுதியில் இருக்கும் வனத்துறை சோதனை சாவடியில் வேலைப் பார்க்கும் சக பணியாளர்களை பார்த்துவிட்டு மோட்டார் சைக்கிளில் சாலமோன் வால்பாறை நோக்கி சென்று கொண்டிருந்தார்.

இந்நிலையில் சோலையார் எஸ்டேட் பகுதி அருகே சென்ற போது நிலைதடுமாறிய மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து படுகாயமடைந்த சாலமோனை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சாலமோன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |