Categories
சினிமா

“நாங்கள் யாரென்று உலகத்துக்குத் தெரியவரும்”…. சீமான் வெளியிட்ட திடீர் பதிவு…..!!!!!

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தன் டுவிட்டர் பதிவில் பதிவிட்டிருப்பதாவது “தமிழர்களின் போற்றுதற்குரிய மூதாதை, அரசனுக்கு அரசன் அருள் மொழிச் சோழனின் உண்மையான வரலாற்றையும், இந்த நூற்றாண்டின் இணையற்ற விடுதலைப் போராளி தமிழ்த்தேசிய தலைவர் அண்ணன் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் வரலாற்றையும் ஆகச் சிறந்த கலை வடிவமாக நான் தயாரிக்க, என் அன்புத் தம்பி வெற்றிமாறன் இயக்குவார்.

வரலாற்றில் புறக்கணிக்கப்பட்ட இனத்தின் மக்கள், தங்களுக்குரிய வரலாற்றைத் தாங்களே எழுதுவார்கள் என்ற அறிவாசான் அண்ணல் அம்பேத்கரின் புரட்சி மொழிக்கேற்ப, ஒருநாள் எங்களுக்கான வரலாற்றை நாங்களே எழுதும்நாள் வரும். அன்றைக்கு தமிழர்கள் நாங்கள் யாரென்று உலகத்திற்குத் தெரிய வரும்” என்று அவர் பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |