Categories
உலக செய்திகள்

சிறுமியை வன்கொடுமை செய்த வழக்கு… கைதான கிரிக்கெட் வீரர்….!!!

நேபாள கிரிக்கெட் அணியினுடைய கேப்டனாக இருந்த வீரர் சந்தீப் லாமிச்சானே, 17 வயது சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில் கைதாகியுள்ளார்.

நேபாள கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்த சந்தீப் லாமிச்சானே, ஐபிஎல் போட்டியில் விளையாடிய முதல் நேபாள வீரராவார். இந்நிலையில், இவர் 17 வயதுடைய சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் சிக்கி உள்ளார். இது குறித்து அந்த சிறுமி தெரிவித்த புகாரில், ஒரு நபரின் மூலமாக சந்தீப்பை சந்திக்க அனுமதி கிடைத்தது.

அதன் பிறகு கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 21 ஆம் தேதி அன்று காத்மாண்டு ஹோட்டலுக்கு  என்னை அழைத்து, அறையில் வைத்து பாலியல் தொந்தரவு செய்தார் என்று கூறப்பட்டிருக்கிறது. இது தொடர்பில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதனை தொடர்ந்து காத்மாண்டு மாவட்ட நீதிமன்றம் பிடிவாரண்டு பிறப்பித்திருக்கிறது.

மேலும் நேபாளத்தின் கிரிக்கெட் வாரியமானது, அவரை சஸ்பெண்ட் செய்திருக்கிறது. தற்போது அவரை காவல்துறையினர் கைது செய்து காவலில் வைத்திருக்கிறார்கள்.

Categories

Tech |