மதுரை மாவட்டத்தில் புகழ் பெற்ற மீனாட்சி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்கு நவராத்திரி திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. நேற்று விஜயதசமியை முன்னிட்டு மீனாட்சி அம்மன் சடையலம்புதல், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை சேர்த்து நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. இதில் சுந்தரேஸ்வரர்- பிரியாவிடை, மீனாட்சி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்தனர். இந்நிலையில் நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு நேற்று 108 வீணை இசைக் கலைஞர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியும் சிறப்பாக நடைபெற்றது.
Categories
108 வீணை இசை கலைஞர்கள் பங்கேற்ற நிகழ்ச்சி….. பிரபல கோவிலில் நவராத்திரி கொண்டாட்டம்…..!!!
