தமிழ் சினிமாவில் இப்போதைய பிரபல நடிகைகளில் ஒருவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இவருடைய நடிப்பில் அடுத்து வெளியாக போகும் படத்தை ஒருநாள் கூத்து, மான்ஸ்டர் போன்ற திரைப்படங்களை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் இயக்குகிறார். இத்திரைப்படத்தை தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபுவின் ட்ரீம் வாரியர் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. இப்படத்துக்கான படப்பிடிப்பு வேலைகள் முடிவடைந்து, இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
அந்த வகையில் அப்படத்திற்கு “ஃபர்ஹானா” என்ற தலைப்பு வைக்கப்பட்டு இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் ஐஸ்வர்யாராஜேஷ் படமானது இடம்பெற்றிருக்கிறது. இத்திரைப்படத்திற்கு கவிஞரும், எழுத்தாளருமான மனுஷ்யபுத்திரன் வசனம் எழுதி இருக்கிறார். இது தவிர்த்து செல்வராகவன், ஜித்தன் ரமேஷ், ஐஸ்வர்யா தத்தா போன்றோர் நடித்து உள்ளனர். இப்படத்தை இந்த வருடம் இறுதியில் திரைக்கு கொண்டுவர தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டு உள்ளது.