Categories
தேசிய செய்திகள்

சீனியர் சிட்டிசன்களுக்கான ஜாக்பாட் திட்டம்…. மாதம் 18,500 பெறலாம்….. உடனே முந்துங்கள்….!!!!

இந்தியாவில் வேலை பார்க்கும் அனைவருமே தங்களுடைய ஓய்வுக்கு பிறகு நிரந்தரமாக ஒரு வருமானம் வர வேண்டும் என்று விரும்புவார்கள். இவர்களுக்காக பிரதான் மந்திரி வய வந்தனா யோஜனா திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான எல்ஐசி செயல்படுத்துகிறது. இந்த திட்டத்தில் சேர விரும்புவர்களுக்கு கட்டாயம் 60 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். இந்த திட்டத்தில் நேரடியாகவோ அல்லது ஆன்லைன் மூலமாகவோ சேர்ந்து கொள்ளலாம். இந்த திட்டத்தில் சேருவதற்கான கால அவகாசம் தற்போது வருகிற 2023-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தில் இணைவதற்கான முதலீடு தொகை ரூபாய் 15 லட்சம் ஆக இருக்கும் பட்சத்தில், கணவன்-மனைவி சேர்ந்து திட்டத்தில் இணைந்தால் 30 லட்சம் முதலீடு செய்ய வேண்டும். இந்த திட்டத்திற்கான ஒரு வருட வட்டி 7.40% ஆகும். இதற்கு 111000 ரூபாய் வட்டியாக கிடைக்கிறது. இந்த தொகையை 12 மாதத்திற்கு சரி பாதியாக பிரிக்கும்போது கிடைக்கும் 18 ஆயிரத்து 500 ரூபாய் ஓய்வூதியமாக வழங்கப்படுகிறது. இந்தத் திட்டம் மூத்த குடிமக்களுக்கான ஒரு சிறந்த திட்டமாக இருப்பதால் குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் சீனியர் சிட்டிசன்கள் திட்டத்தில் இணைந்து பயன் பெறலாம். மேலும் திட்டத்திற்கான முதிர்ச்சி காலம் 10 வருடங்கள் ஆகும்.

Categories

Tech |