மகளை பாலில் பலாத்காரம் செய்த தந்தையை போலீசார் கைது செய்துள்ளனர்.
மராட்டிய மாநிலத்தில் உள்ள மும்ப்ரா பகுதியில் 17 வயதுடைய ஒரு சிறுமி வசித்து வருகிறார். இவர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் சிறுமியின் தந்தையை கைது செய்துள்ளனர். மேலும் இது குறித்து காவல் ஆய்வாளர் மாதுரி ஜாதவ் கூறியதாவது. இந்த சிறுமி பிறக்கும்போது அவரது தாய் இறந்துவிட்டார். இதனை காரணம் காட்டி அந்த சிறுமியின் தந்தை அவரை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இந்நிலையில் ஒரு கட்டத்தில் தைரியத்துடன் அந்த சிறுமி வந்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து சிறுமியின் தந்தையை கைது செய்தோம். பின்னர் அவரை நகர கோர்ட்டில் ஆஜர் படுத்தினோம். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் அவரை ஒரு வாரத்திற்கு போலீசாரின் காவலில் வைக்க உத்தரவிட்டது. அந்த உத்தரவின்படி அவர் தற்போது போலீசாரின் காவலில் வைக்கப்பட்டுள்ளார் என அவர் கூறியுள்ளார்.