ஆசியாவில் சுமார் 32 கோடி மக்கள் வறுமையில் இருக்கும் நிலையில் அங்கு 950 கோடீஸ்வரர்கள் இருப்பதாக ஆய்வில் தெரியவந்திருக்கிறது.
உலக நாடுகளில் கொரோனா வைரஸ் பரவ தொடங்கி ஊரடங்கு நடைமுறைப்படுத்திய போது, பொருளாதார நடவடிக்கைகளில் மந்த நிலை ஏற்பட்டது. இருப்பினும் 500 நபர்கள் வரை கோடீஸ்வரர் என்ற நிலையை அடைந்திருக்கிறார்கள் என்று ஆக்ஸ்பேம் நடத்திய ஆய்வில் தெரிய வந்திருக்கிறது.
அந்த வகையில் கொரோனா அதிகம் பரவிக் கொண்டிருந்த காலகட்டத்தில், ஒவ்வொரு முப்பது மணி நேரங்களுக்கும் ஒருவர் கோடீஸ்வரராக உயர்ந்திருக்கிறார். ஆனால் இந்த வருடம் 10 லட்சம் மக்கள் ஏழ்மை நிலையில் இருக்கிறார்கள். ஆசியாவை சேர்ந்த 32 கோடி மக்கள் வறுமை நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள். போர்ப்ஸின் பட்டியலில், கோடீஸ்வரர்கள் 2400 பேரில் 950 பேர் ஆசியர்கள் என்று கூறப்பட்டிருக்கிறது.
சீனா இந்த பட்டியலில் முதலிடம் வகிக்கிறது. அங்கு 440 நபர்கள் கோடீஸ்வரர்களாக இருக்கிறார்கள். அதற்கு அடுத்த இடத்தில் இருக்கும் இந்தியாவில் 116 பேர் இருக்கிறார்கள். இதில் 51 கோடீஸ்வரர்கள் மும்பையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.