தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகரில் ஒருவராக வலம் வருபவர் விஷால் இவர் முதன்முதலாக நடித்த செல்லமே, சண்டைக்கோழி, திமிரு போன்ற படங்கள் வெற்றி பெற்றது. விஷால் தற்போது தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளர் பதவியிலும் இருக்கிறார். இந்த நிலையில் விஷால் தற்போது நடித்திருக்கும் திரைப்படம் லத்தி இதனை புதுமுக இயக்குனர் வினோத்குமார் இயக்கியுள்ளார்.
இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக சுனைனா நடித்துள்ளார் ராணா புரோடக்ஷன் சார்பாக ரமணா மற்றும் நந்தா போன்ற இந்த படத்தை தயாரித்து வருகின்றனர். இந்த நிலையில் லத்தி திரைப்படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி ட்ரெண்ட் ஆனது. இதனை அடுத்து இந்த படத்தின் முதல் லிரிக்ஸ் பாடலான தோட்டா லோடாக வெயிட்டிங் வெளியாகியிருக்கிறது. ஆக்சன் காட்சிகளில் உருவாகி இருக்கும் இந்த பாடலை இசை அமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா மற்றும் எம் சி விக்கி போன்றோர் பாடியுள்ளனர் இந்த நிலையில் இந்த பாடலை ரசிகர்கள் இணையத்தில் வைரல் ஆக்கி வருகின்றனர்.