Categories
உலக செய்திகள்

சூரியனில் 2 லட்சம் நீளம் உள்ள இழை வெடிப்பு…. பூமிக்கு பெரிய ஆபத்தா….? நிபுணர்கள் கணிப்பு….!!!!

சூரியன் அமைதியாக இருக்கின்றது என்று நாம் அனைவரும் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் உண்மையில் சூரியனில் 2 லட்சம் கிலோ மீட்டர் நிளமும் உள்ள ஒரு இழை வெடித்துள்ளதை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த நீண்ட இழை சூரியனின் தெற்கு அரைக்கோளத்தில் வெடித்துள்ளது. இந்த வெடிப்பில் இருந்து வெளிவரும் சிதறல்கள் பூமியை நோக்கி வரப்படும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். மேலும் வெடித்த இடத்தில் இருந்து கரோனஸ் மாஸ் எஜெக்ஷன் வெளிவரும் என்பது குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் மிகப்பெரிய ஆற்றல்மிக்க மற்றும் அதிக காந்தமயமாக்கப்பட்ட பிளாஸ்மா மேகம் சூரியனிலிருந்து வெடிப்பு ஏற்பட்டு புவி காந்த புயல் உருவாகும்.

இது பூமியில் ரேடியோ மற்றும் காந்த இடையூறுகளை ஏற்படுத்தலாம் என கணிக்கப்பட்டுள்ளது. சூரிய எரிப்பு சக்தி வாய்ந்த வெடிப்புகள் தான் புவி காந்த புயலாகும். இது ரேடியோ தகவல் தொடர்புகள், மின்சார கட்டிடங்கள் மற்றும் மின்கல சமிக்கைகளை பாதிக்கலாம். அது மட்டுமல்லாமல் விண்கலம் மற்றும் விண்வெளி வீரர்களுக்கு இது பெரும் ஆபத்தை ஏற்படுத்தலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. இந்த வெடிப்பு செவ்வாய்க்கிழமை காலை ஏற்பட்டுள்ளது. இதனால் அக்டோபர் 3,4 தேதிகளில் சூரிய புயல் சூரியனிலிருந்து வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |