தொடர் மின்வெட்டு காரணமாக 13 கோடி பேர் அவதிப்பட்டு வருகின்றனர் என தகவல் வெளியாகி உள்ளது.
வங்கதேசத்தில் நேற்று முதல் தொழில்நுட்ப கோளாறு காரணமாக மின்சார தடை ஏற்பட்டுள்ளது. இதனால் தலைநகர் டாக்கா பகுதியில் சுமார் 13 கோடி பேர் மின்சாரம் இன்றி தவித்து வருவதாக தெரியவந்துள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பினால் உலகளாவிய எரிசக்தியின் விலைகள் தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகின்றது. இதன் விளைவாக வங்காள தேசத்தில் சமீபத்திய மாதங்களில் பெரும் மின்னெருக்கடி ஏற்பட்டுள்ளது. மேலும் தெற்காசிய நாடுகளில் நீடித்த மின்தடை காரணமாக பொதுமக்கள் கடும் கோபத்தில் உள்ளனர்.
மேலும் மின்சார தேவையை பூர்த்தி செய்ய இறக்குமதி செய்யப்பட்ட டீசல் மற்றும் எரிவாயுவுக்கு பணம் செலுத்த முடியாமலும் தெற்காசிய நாடுகள் தவித்து வருவது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக வங்காள தேசத்தில் 80 சதவீத பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருப்பதால் முக்கிய ஆடை துறை மற்றும் தொலைத்தொடர்பு சேவைகள் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த மின்வெட்டு குறித்து வங்காளதேச அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.