Categories
தேசிய செய்திகள்

பார்த்ததும் குரைத்த நாய்…. இரக்கமின்றி 3 பேரின் வெறிச்செயல்…. போலீஸ் நடவடிக்கை….!!!!

கர்நாடகாவின் பெங்களூரு கிழக்குநகரில் மஞ்சுநாதா பகுதியில் வசித்து வருபவர் வீட்டில் செல்ல பிராணியாக நாய் ஒன்றை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் அவரது வீட்டின் வழியே இரவு வேளையில் 3 பேர் நடந்து சென்றுள்ளனர். இதற்கிடையில் அடையாளம் தெரியாத நபர்களை பார்த்தால் குரைப்பதுதான் நாயின் வழக்கம். இதேபோல அவர்களை நோக்கி நாய் குரைத்துள்ளது என்று கூறப்படுகிறது. அவ்வாறு தங்களை நோக்கி குரைத்துவிட்டது என கோபமடைந்த அந்த 3 பேரும் சேர்ந்து மரக்கட்டைகளை எடுத்து, சங்கிலியில் கட்டியிருந்த நாயை அடித்து தாக்கி இருக்கின்றனர். இதனால் வலி தாங்கமுடியாமல் நாய் தரையில் சுருண்டபடி கத்தியுள்ளது.

அவர்களை தடுக்கவந்த நபர் ஒருவர், இக்காட்சியை வீடியோ எடுத்துள்ளார். அப்போது அவரை 3 பேரும் தள்ளிவிட்டுள்ளனர். அதன்பின் அவர்கள் நாயை அடித்துள்ளனர். இதுகுறித்து அறிந்த நாயின் உரிமையாளர் வீட்டிலிருந்து வெளியே ஓடிவந்துள்ளார். அவரை பார்த்ததும் 3 பேரும் அப்பகுதியில் இருந்து நடந்து சென்றுவிட்டனர். அதனை தொடர்ந்து அந்த நாயை கால்நடை மருத்துவமனைக்கு கொண்டுசென்றுள்ளனர். தற்போது அதன் நிலைமை என்னவென தெரியவில்லை. இதற்கிடையில் போலீசில் அளித்த புகாரின்படி ராகுல், ரோகித் மற்றும் ரஜத் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Categories

Tech |