Categories
சினிமா தமிழ் சினிமா

சிரஞ்சீவி நம்பிக்கையை காப்பாற்றிய “காட்பாதர்”….. விஜயதசமி வெளியீட்டில் முன்னணி….!!!!!

சிரஞ்சீவி நடிப்பில் வெளியாகியுள்ள காட்பாதர் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

மலையாளத்தில் சென்ற 2 வருடத்திற்கு முன்பாக பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன் லால் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் லூசிபர். தற்போது இத்திரைப்படத்தை தெலுங்கில் காட்பாதர் என்ற பெயரில் ரீமேக் செய்யப்படுகின்றது. இப்படத்தை மோகன் ராஜா இயக்குகின்றார். இத்திரைப்படத்தில் ஹீரோயினாக நயன்தாரா நடிக்க முக்கிய வேடத்தில் பாலிவுட் நடிகர் சல்மான்கான் நடித்திருக்கின்றார்.

சூப்பர் குட் ஃபிலிம்ஸ் மற்றும் என்.வி.ஆர் பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கும் இத்திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் வீடியோ அண்மையில் வெளியாகி வைரலானது. இந்தநிலையில் இன்று திரையரங்கில் வெளியாகியுள்ளது. சிரஞ்சீவி நடிப்பில் கடைசியாக வெளிவந்த ஆச்சார்யா திரைப்படம் பெரும் தோல்வியை சந்தித்ததால் இப்படத்தின் மீது சிரஞ்சீவி மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தார்.

அவரின் நம்பிக்கையை காப்பாற்றும் வகையில் இயக்குனர் மோகன் ராஜா, இசையமைப்பாளர் தமன் உள்ளிட்டோர் சேர்ந்து சிறப்பான திரைப்படமாக கொடுத்திருப்பதாக டோலிவுட் வட்டாரத்தில் செய்தி வெளியாகி வருகின்றது. சிரஞ்சீவி ரசிகர்களுக்கு இத்திரைப்படம் பிடித்திருப்பது படம் வெற்றி பட வரிசையில் இணைந்து விடும் என சொல்லப்படுகின்றது. விஜயதசமி முன்னிட்டு இன்று வெளியான திரைப்படங்களில் சிரஞ்சீவி திரைப்படம் தான் முன்னணியில் இருக்கின்றது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |