பணத்தை சேமித்துவைக்க வேண்டுமென அனைவரும் நினைப்பார்கள். அதற்கு பல்வேறு வழிகள் உள்ளதால், இவற்றில் எப்போதும் மக்களுக்கு ஒரு சந்தெகம் இருந்து கொண்டே இருக்கும். நீங்களும் உங்களது பணத்தைச் சேமிக்க விரும்பினால், இப்பதிவில் கூறப்பட்டுள்ள தகவல்கள் உதவியாக இருக்கும். இவற்றில் ஒரு லாபகரமான அரசாங்கத் திட்டம் குறித்து தெரிந்து கொள்ளாலாம். இதனிடையில் இவற்றில் முதலீட்டாளர்கள் நல்லஒரு லாபத்தினை ஈட்டலாம். எஸ்.பி.ஐ, தபால் நிலையம் ஆகியவை சேமிப்புத்திட்டத்துக்கான சிறந்த இடங்களாக பார்க்கப்படுகிறது. எனினும் பல சமயங்களில் பணத்தை முதலீடு செய்வதற்கு முன்பு, போஸ்ட் ஆபீஸ் திட்டத்தில் முதலீடு செய்வதா (அல்லது) எஸ்பிஐ-ல் முதலீடு செய்வதா எனும் குழப்பம் நமது மனதில் தோன்றுவது வழக்கம் ஆகும்.
இருப்பினும் இனி உங்களுக்கு அந்த குழப்பம் வேண்டாம். எங்கு முதலீடு செய்தால் அதிகலாப கிடைக்கும் என்பதை இப்பதிவில் தெரிந்து கொள்ளலாம். நாட்டின் மிகப் பெரிய அரசு வங்கியான எஸ்.பி.ஐ வாடிக்கையாளர்களுக்கு நிலையான வைப்புத்தொகையை வழங்குகிறது. SBI எப்டி வட்டிவிகிதத்தையும் உயர்த்தியுள்ளது. ஆகஸ்ட் 13 ஆம் தேதியன்று வங்கி வட்டிவிகிதங்களை அதிகரித்தது. அதன்பின் வாடிக்கையாளர்கள் 7 நாட்கள் முதல் 10 வருடங்கள் வரையிலான FD-களில் 2.90 % முதல் 5.65 % வரை வட்டி பெறுகிறார்கள். அதேநேரம் மூத்தகுடிமக்களுக்கு 3.4 % முதல் 6.45 % வரை வட்டியில் பலன் கிடைக்கும். இதனிடையில் தபால் நிலையமும் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு வசதிகளை செய்துதருகிறது.
போஸ்ட் ஆபீஸ் எப்டிகளைப் பற்றி பேசும்போது, 2 வருடங்களுக்கான எஃப்டிகளுக்கான வட்டி விகிதங்கள் 20 அடிப்படை புள்ளிகள் அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. தற்போது வாடிக்கையாளர்கள் இவற்றில் 5.7% மற்றும் 3 வருட FDல் 5.8 % பலன்களைப் பெறுகின்றனர். 5 வருடகால வைப்புத்தொகை பற்றி பேசும்போது, வாடிக்கையாளர்களுக்கு 6.7 % என்ற விகிதத்தில் பலன் கிடைக்கும். கிசான்விகாஸ் பத்திராவின் இரண்டு கால அளவுகளிலும் அரசு மாற்றங்களைச் செய்திருக்கிறது. தற்போது கிசான்விகாஸ் பத்ரா 123 மாதம் டெபாசிட்டுகளுக்கு 7 சதவீத வட்டியானது அளிக்கப்படும்.
இந்த 3 டெபாசிட்களையும் ஒப்பிட்டுப் பார்த்தால், மற்ற 2யும் விட தபால்அலுவலக FD மிகவும் கவர்ச்சிகரமானதாகத் தெரிகிறது. இத்திட்டங்கள் அனைத்திலும் பெறப்பட்ட வட்டியை ஒப்பிட்டுப் பார்த்தால், முதலீட்டாளர்கள் அஞ்சலக FDயில் அதிக பலன்களைப் பெறுவார்கள் என்பது தெளிவாகிறது. அதன்படி, தற்போதைய விகிதங்களைப் பொறுத்தவரையிலும் முதலீட்டாளர்கள் தபால் அலுவலகத்தில் பணத்தை முதலீடு செய்வது லாபகரமானதாக இருக்கும்.