புதிய ஓட்டுனர் உரிமம் பெறும் நடைமுறையால் காலம் தாமதமாவதாக ஓட்டுனர்கள் மற்றும் பயிற்சி பள்ளி உரிமையாளர்கள் குற்றம் சாட்டி உள்ளார்கள்.
திண்டுக்கல் மாவட்டத்தில் நான்கு இடங்களில் வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றது. இந்த அனைத்து வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களிலும் பொதுமக்கள் தாமாக முன்வந்து ஓட்டுனர் பயிற்சி பள்ளிகளில் வாகனங்களை ஓட்டுவதற்கு முறையாக பயிற்சி பெற்ற பிறகு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் நடத்தப்படும் தேர்வில் வெற்றி பெற்று ஓட்டுநர் உரிமத்தை பெற்றுக் பெற்றுக் கொள்ளும் முறை வழக்கத்தில் இருந்தது.
இதற்காக வாரத்தின் அனைத்து நாட்களிலும் ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான தேர்வுகள் நடத்தப்பட்டு ஓட்டுநர் உரிமம் வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது இந்த நடைமுறையில் மாற்றம் செய்யப்பட்டு இருக்கின்றது. வார நாட்களில் செவ்வாய் மற்றும் புதன்கிழமை உள்ளிட்ட இரண்டு நாட்கள் மட்டுமே ஓட்டுனர் பயிற்சி பள்ளியில் வாகனங்கள் ஓட்டி பழகியவர்கள் உரிமம் பெறுவதற்கு அனுமதிக்கப்பட்டிருக்கின்றது. வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் கொண்டு வரப்பட்டுள்ள இந்த புதிய நடைமுறையால் ஓட்டுநர் உரிமம் பெறுவதில் காலதாமதம் ஏற்படுவதாக ஓட்டுநர்கள் மற்றும் பயிற்சி பள்ளி உரிமையாளர்கள் குற்றம் சாட்டியிருக்கின்றார்கள்.