Categories
மாநில செய்திகள்

ஆண்டு முழுவதும் அன்னதானம்…. முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு….. மகிழ்ச்சியில் மக்கள்…!!!

வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்று பாடிய திருவருட்பிரகாச வள்ளலார் பிறந்த தினம் இன்று. இவர் சிதம்பரம் அருகில் மருதூரில் 1823 ஆம் வருடம் பிறந்தார். ஆன்மீகவாதியான இவர் சமரச சுத்த சன்மார்க்க சத்ய ஞான சபையை நிறுவினார். இந்த நிலையில் முதல்வர் மு க ஸ்டாலின் இன்று சென்னை ராஜா அண்ணாமலைபுரம் அருள்மிகு கபாலீஸ்வரர் கற்பகாம்பாள் திருமண மண்டபத்தில் வள்ளலாரின் முப்பெரும் விழாவை கொண்டாடும் விதமாக வள்ளலார் 200, இலச்சினை, தபால் உரை மற்றும் சிறப்பு மலர் ஆகிவற்றை வெளியிட்டார்.

இந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின், அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவினை தொடங்கி வைத்த முதல்வர் வடலூரில் 100 கோடி ரூபாயில் வள்ளலார் மையம் அமைக்கப்படும். வள்ளலாரின் 200 வது பிறந்த நாளை ஒட்டி இந்த ஆண்டு முழுவதும் அன்னதானம் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |