Categories
உலக செய்திகள்

“இதனை ஊக்குவிப்பதாக அர்த்தம் ஆகிவிடும்”…. ராஜா சார்லஸின் 2வது திருமணத்தில்…. ராணி எலிசபெத் கலந்து கொள்ளாததன் காரணம்….?

பிரிட்டனின் தற்போதைய ராணியாக உள்ள Consort கமீலாவின் முதல் திருமணத்தில் மகாராணியார் இரண்டாம் எலிசபெத் கலந்து கொண்டுள்ளார் கடந்த 1973 ஆம் ஆண்டு கமீலாவுக்கும் ஆண்ட்ரூ பார்க்கர் பவுல்ஸ் என்பவருக்கும் திருமணம் நடைபெற்று உள்ளது. இந்த தம்பதிகள் கடந்த 1995 ஆம் ஆண்டு விவாகரத்தும் செய்து கொண்டனர். கமிலா அரச குடும்பத்திற்குள் உறுப்பினராக வருவதற்கு முன்பே அந்த குடும்பத்தாருடன் நட்பு கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. அதேபோல ஆண்ட்ரூவுக்கும் ராணி குடும்பத்துடன் மிக நெருங்கிய அறிமுகம் இருந்தது. அதன்பின் பிற்காலத்தில் தனது மருமகளாக வரப்போகிறவர் என தெரியாமலேயே கமிலாவின் முதல் திருமணத்தில் ராணி இரண்டாம் எலிசபெத் கலந்து கொண்டுள்ளார்.

அதுமட்டுமல்லாமல் ராணி எலிசபெத் கமிலா மற்றும் ஆண்ட்ரூ ஜோடிக்கு கார்கி என்ற இனத்தைச் சேர்ந்த நாயை பரிசாக கொடுத்துள்ளார். அதன்பின் சில கருத்து வேறுபாடு காரணமாக இந்த தம்பதி பிரிந்த போது ராணி தான் பரிசாக கொடுத்த நாயை திரும்ப பெற்றுள்ளார். இதனை அடுத்து சிறிது காலம் கழித்து ராணியாரின் மகன் சார்லஸூக்கும் கமிலாவுக்கும் கடந்த 2005 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது. ஆனால் இந்த திருமணத்தில் ராணி எலிசபெத் கலந்து கொள்ளவில்லை. ஏனெனில் அந்த திருமணத்தில் ராணி எலிசபெத் கலந்து கொண்டால் விவாகரத்தை ஊக்குவிப்பதாக அர்த்தம் ஆகிவிடும் என நினைத்து அதனை தவிர்த்து விட்டார் என்று கூறப்படுகிறது.

Categories

Tech |