Categories
உலக செய்திகள்

எரிவாயு குழாயில் ஏற்பட்ட சேதம்…. ஆய்வு செய்வதற்கு அனுமதி இல்லை…. புகார் அளித்த நோர்ட் ஸ்ட்ரீம் நிறுவனம்….!!!!

நோர்ட் ஸ்ட்ரீம் 2 பைப் லைனில் ஏற்பட்ட கசிவு குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.

ரஷ்ய நாட்டில் இருந்து ஜெர்மனிக்கு நோர்ட் ஸ்ட்ரீம் 1, 2 என்ற இரண்டு பைப் லைன்களில் எரிவாயு எடுத்துச் செல்லப்படுகின்றது. இந்த இரண்டு பைப் லைன்களிலும் கடந்த வாரம் நான்கு கசிவுகள் கண்டறியப்பட்டுள்ளது. இந்த சேதமடைந்த பகுதிகளை ஆய்வு செய்ய தேவையான அனுமதிகள் வழங்கப்படவில்லை என நோர்ட் ஸ்ட்ரீம் ஏஜி கடந்த செவ்வாய்க்கிழமை அன்று தெரிவித்துள்ளது. மேலும் இந்த கசிவானது ரஷ்யாவின் திட்டமிட்டப்பட்ட தாக்குதலால் ஏற்படுத்தப்பட்டு இருப்பதாக ஐரோப்பிய நாடுகள் மற்றும் பிரித்தானியா குற்றம் சாட்டியுள்ளது.

இந்நிலையில் நார்வே ஸ்வீடன் டென்மார்க் ஆகிய நாடுகளின் மதிப்பாய்வுகளை செய்ய போதுமான அனுமதிக்கு காத்திருப்பதாக நோர்ட் ஸ்ட்ரீம் நிறுவனம் தனது எழுத்துப்பூர்வ அறிக்கையில் கூறியுள்ளது. மேலும் சுவீடனும் டென்மார்க்கும் பைப் லைனில் ஏற்பட்டுள்ள சேதங்கள் குறித்து விசாரணையை தொடர்ந்து நடத்தி வருகின்றது. ஆனால் அதே நேரத்தில் நார்வே நோர்ட் ஸ்ட்ரீம் ஏஜி இன் ஆய்வுக் கப்பல் புறப்படுவதற்கு அனுமதியும் கொடுக்க உள்ளது என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த கசிவு குறித்து நோர்ட் ஸ்ட்ரீம் நிறுவனம் தனியாக விசாரணையை தொடங்குவதற்கு முன்பாக போலீஸ் விசாரணைகள் முடியும் வரை காத்திருப்பதாக தெரிவித்துள்ளது.

Categories

Tech |