வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பத்தலபள்ளியில் காய்கறி மார்க்கெட் செயல்பட்டு வந்தது. ஆனால் அந்த மார்க்கெட்டை தற்போது போக்குவரத்து நெரிசல் இல்லாமல் இருக்கும் தனியார் நிலத்திற்கு மாற்றினர். இதற்கு அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் மார்க்கெட்டுக்கு செல்வதற்காக தற்காலிக சாலை அமைக்கப்பட்டுள்ளது. அந்த சாலை கால்வாய் மீது அமைக்கப்பட்டதாக கூறி வருவாய் துறையினர் பொக்லைன் இயந்திரம் மூலம் சாலையில் பள்ளம் தோண்டியதால் கோபமடைந்த விவசாயிகள் சங்க தலைவர் நாராயணன், துணைத் தலைவர் ரங்கநாதன் ஆகியோர் தலைமையில் வியாபாரிகள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து அறிந்த தாசில்தார் சம்பவ இடத்திற்கு சென்று தோண்டிய பள்ளத்தை மூடுமாறு கூறிவிட்டு அங்கிருந்து சென்றார். மேலும் போலீசார் அங்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்ட வியாபாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.