Categories
Uncategorized கரூர் மாவட்ட செய்திகள்

மைல் கல்லுக்கு படையல்…. ஆயுத பூஜையை சிறப்பாக கொண்டாடிய சாலை பணியாளர்கள்….!!!!

சாலை பணியாளர்கள் மைல் கல்லுக்கு படையல் இட்டு ஆயுத பூஜை கொண்டாடியுள்ளனர்.

கரூர் மாவட்டத்தில் உப்பிடமங்கலம் சாலையின் ஓரத்தில் மைல் கல் உள்ளது. இந்த மைல் கல்லுக்கு ஆயுத பூஜையை முன்னிட்டு சாலை பணியாளர்கள் படையலிட்டு ஆயுத பூஜை கொண்டாடியுள்ளனர். மேலும் அவர்கள் மாநில நெடுஞ்சாலையில் உள்ள அந்த மைல் கல்லை தூய்மைப்படுத்தி திருநீறு, சந்தனம், குங்குமம் இட்டு மாலை அணிவித்து மரியாதை செய்து சுண்டல், பொறி, கடலை, தேங்காய், பழம் உள்ளிட்டவைகளை படைத்ததோடு மட்டுமல்லாமல் சாலை பணிக்கு பயன்படுத்தப்படும் பொருட்களையும் வைத்து தீப ஆராதனை காட்டி வழிபாடு செய்துள்ளனர். இதில் சாலை ஆய்வாளர் கண்ணதாசன் தலைமையில் சாலை பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Categories

Tech |