இந்தியாவில் மாடுகளுக்கான தீவனத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் காரணத்தால் பால் மற்றும் இறைச்சி விலை உயரக்கூடும் என தகவல் வெளியாகி உள்ளது. மாடுகளுக்கான தீவனங்களின் விலை கடந்த 9 ஆண்டு உச்சத்தை தொட்டுள்ளது. பல பகுதிகளிலும் கன மழை காரணமாக பயிர்கள் சேதம் அடைந்துள்ளதால் தீவனங்களின் விலை உயர்ந்துள்ளது. இதனால் இழப்புகளை சமாளிப்பதற்காக விவசாயிகள் விலையை உயர்த்தி வருகிறார்கள்.கடந்த டிசம்பர் மாதம் முதல் தீவனத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில் பால் மற்றும் இறைச்சி விலை உடனடியாக உயருகின்றது.
எள்ளு புண்ணாக்கு விலை இரண்டு மடங்கு அதிகரித்து குவிண்டாலுக்கு சுமார் 3000 ரூபாய்க்குவிற்பனை செய்யப்படுவதாகவும் பச்சை தீவனங்களின் விலையும் உயர்ந்து விட்டதாகவும் விவசாயிகள் கூறியுள்ளனர். மற்ற தீவனங்களின் விளையும் உயர்ந்துள்ள காரணத்தால் இனிவரும் நாட்களில் பால் மற்றும் இறைச்சி விலை மேலும் உயரக்கூடும். இதனால் குடும்பங்களுக்கு செலவும் சுமையும் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.