Categories
Tech டெக்னாலஜி

OPPO நிறுவனத்தின் புதிய மாடல் போன்…. மிகவும் கம்மியான விலையில்…. அசத்தல் அறிமுகம்….!!!!!

பிரபலமான ஓப்போ நிறுவனம் தங்களுடைய புதிய மாடலான ஓப்போ ஏ77 செல்போனை தாய்லாந்தில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த மாடல் கூடிய விரைவில் இந்தியாவிலும் அறிமுகம் ஆகிறது. எனவே ஓப்போ ஏ77 மாடலில் இருக்கும் சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கலாம். அதாவது ஓப்போ ஏ77 போனில் 720×1612 pixel HD+ 6.56 inch IPS LCD panel இருக்கிறது. அதன் பிறகு 90 Hz, 269 ppi dark pixel, 600 nits brightness, வாட்டர் டிராப் நாட்ச் திரை, பாண்டா கிளாஸ் போன்ற வசதிகளும் இருக்கிறது.

இதனையடுத்து 8 மெகா பிக்சல் செல்பி கேமரா, பின்புறம் டூயல் கேமரா அமைப்பில் 50 மெகா பிக்சல் பிரதான கேமரா, 2 மெகாபிக்ஸ் மோனோலென்ஸ், எல்இடி பிளாஷ், செல்ஃபி மற்றும் பேக் கேமராவில் 1080பி வீடியோ பதிவை 30fps ஆதரிக்கிறது. இதைத்தொடர்ந்து 8 ஜிபி ரேம், 128 ஜிபி சேமிப்பு, 33w supervooc charge, 5000mAh battery, Android 12 OS, colour OS 12.1, fingerprint scanner, dual sim card use, 4G volte, Wi-Fi 802.11ac, Bluetooth 5.1, GPS, micro SD card slot, USB-C fort, 3.5 mm headphone slot, ipx4, ipx5 போன்ற சிறப்பம்சங்களும் இருக்கிறது. மேலும் ஓப்போ ஏ77 போனின் விலை 8,999 ரூபாய் ஆகும்.

Categories

Tech |