மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்றும் முயற்சி என்னாயிற்று என்று திமுக அரசுக்கு சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர் பி உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர் மதுரை விமான நிலையத்தை சர்வதேச தரத்தில் மாற்றுவதற்கு திமுக அரசு ஈடுபட வேண்டும் எனக் கூறியுள்ளார். சென்னையில் புதிதாக உருவாக்கப்படும் விமான நிலையத்திற்கு காட்டும் அக்கறையை மதுரைக்கும் காட்ட வேண்டும் எனவும் அப்போதுதான் மதுரையில் தொழில் வளர்ச்சி பெருகும் என அவர் கூறினார். மைசூர் வாரணாசியில் சிறப்பாக செயல்பட்டு வருவது போல தமிழகத்திலும் முதன்முறையாக மதுரையில் செயல்பட உள்ளதாக ஆர்பி உதயகுமார் கூறியுள்ளார்.
Categories
மதுரை விமான நிலையம் சர்வதேச தரத்தில் எப்போது உயரும்…? திமுக அரசுக்கு ஆர்பி உதயகுமார் கேள்வி…!!!!
