இந்தியாவில் லட்சக்கணக்கான பயனாளர்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வருகின்றனர்.பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு வாட்ஸ்அப் நிறுவனம் அவ்வப்போது புதிய அப்டேட்டுகளை வெளியிட்டு வருகிறது. உலக அளவில் அதிக மக்கள் பயன்படுத்தும் நம்பர் ஒன் செயலியாக whatsapp செயலி விளங்குகிறது. இந்நிலையில் பயனர்களின் தனிப்பட்ட தகவல்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு வாட்ஸ் அப் ஒரு புதிய அப்டேட்டை கொண்டு வந்துள்ளது.
View onceஎன்ற ஆப்ஷன் மூலம் அனுப்பப்படும் போட்டோக்களை பயனர்களால் இதுவரை ஸ்கிரீன்ஷாட் எடுக்க முடியும் என்ற நிலை இருந்தது. ஆனால் தற்போது அந்த வசதி நீக்கப்பட்டுள்ளது.அதன்படி இனி வியூ ஒன்ஸ் மூலம் அனுப்பப்படும் போட்டோ அல்லது வீடியோக்களை ஸ்கிரீன் ஷாட் அல்லது ஸ்கிரீன் ரெக்கார்டு செய்ய முடியாது