பிரித்தானியாவில் குற்றவாளி ஒருவர் நான்கு பேரை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெர்பிஷையரில் அமைந்திருக்கும் வீடு ஒன்றில் 11 வயது லேசி பென்னடம், 13 வயது சகோதரர் ஜான் பால் பென்னட், அவர்களது தாய் டெர்ரி பாரிஸ்(35) மற்றும் லேசியின் 11 வயது தோழி கோனி ஜெணட் போன்றோரை கொலை செய்த குற்றத்திற்காக டேமியன் பெண்டலை போலீசார் கைது செய்துள்ளனர். இதனை தொடர்ந்து நான்கு பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் டெர்பி கிரவுன் கோர்ட்டில் விசாரணைக்கு ஆஜர் படுத்தப்பட்ட டேமியன் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார்.
32 வயதுடைய அவர் கொலை குற்றச்சாட்டுகள் தொடர்பாக மீண்டும் நவம்பர் 24ஆம் தேதி விசாரணையை எதிர்கொள்வார் என அதுவரை அவர் காவலில் வைக்கப்படுவார் எனவும் கூறப்பட்டிருக்கிறது. மேலும் இந்த வழக்கு தொடர்பான விசாரணை மூன்று வாரங்கள் நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. செப்டம்பர் 19, 2021 அன்று ஷெஃபீல்டுக்கு அருகே உள்ள கில்மார்ஷ் சந்தோஷ் கிரசெண்டில் உள்ள ஒரு வீட்டில் நான்கு பேரும் இறந்து கிடந்துள்ளனர்.