வங்கியில் தற்போது ஏடிஎம்களில் பணம் எடுப்பதற்கான விதிமுறைகளை மாற்றி வருகிறது அதன்படி எஸ்பிஐ ஏடிஎம்களில் பணம் எடுக்க சிறப்பு என் தேவைப்படும் இந்த எண்ணை பதிவிடவில்லை என்றால் ஏடிஎம்மில் இருந்து பணம் எடுக்க முடியாது ஏடிஎம் பரிவர்த்தனைகளை பாதுகாப்பானதாக மாற்ற இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது குறித்து எஸ்பிஐ வங்கி கூறியது, ஓடிபி இல்லாமல் வாடிக்கையாளர்கள் பணத்தை எடுக்க முடியாது. பணம் எடுக்கும் நேரத்தில் வாடிக்கையாளர்கள் தங்கள் மொபைல் போனில் ஓடிபி பெறுவார்கள். அந்த எண்ணை உள்ளிட்ட பிறகுதான் ஏடிஎம்மில் பணம் எடுக்க முடியும். அதனை தொடர்ந்து வங்கி வாடிக்கையாளர்களை மோசடியில் இருந்து பாதுகாக்கும் வகையில் ரூ.10,000 மற்றும் அதற்கு மேல் பணம் எடுப்பதற்கு பின்பற்றப்படும் புதிய விதிமுறையை எஸ்பிஐ வங்கி அமல்படுத்தியுள்ளது.
அதன்படி எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கி கணக்கில் இருந்து ரூ.10,000 அல்லது அதற்கு மேல் பணம் எடுக்க விரும்பினால் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு அனுப்பப்பட்ட ஓடிபி மற்றும் டேபிட் கார்டு பின் நம்பரை உள்ளிட வேண்டும். எனவே ஓடிபி நம்பர் இல்லாமல் ஏடிஎம்களில் நீங்கள் பணம் எடுப்பது இனி சாத்தியம் இல்லை. இதனையடுத்து வாடிக்கையாளர்களை மோசடியில் இருந்து பாதுகாக்கும் வகையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக எஸ்பிஐ வங்கி தெரிவித்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே பண மோசடிகள் அதிகரித்து வருகிறது. வாடிக்கையாளர்களுக்கு தெரியாமல் அவர்களுடைய வங்கி கணக்கிலிருந்து பணத்தை திருடுகின்றனர். இது போன்ற சூழலில் பாதுகாப்பு அம்சங்களை பலப்படுத்தும் நோக்கத்தில் எஸ்பிஐ வங்கி இந்த நடவடிக்கையில் இறங்கி உள்ளதாக கூறப்படுகிறது.