Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

போதை ஊசி செலுத்திய வாலிபர் இறப்பு….. விசாரணையில் தெரிந்த உண்மை…. 2 பேரை கைது செய்த போலீஸ்…..!!#

போதை ஊசி செலுத்திக்கொண்ட வாலிபர் இறந்த வழக்கில் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருச்சி மாவட்டத்தில் உள்ள மேல சிந்தாமணி பகுதியில் ஜாவித் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது நண்பர்களுடன் போதை மாத்திரை வாங்கி தண்ணீரில் கரைத்து ஊசி மூலம் உடலில் செலுத்தியுள்ளார். இதனால் மயங்கி விழுந்த ஜாவித்தை பக்கம் பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஜாவித் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் ஜாவித் தனது நண்பர்களான ஆசிக் பாட்ஷா, அன்சாரி, பிரசன்னா, உலகநாதன் ஆகியோருடன் இணைந்து அண்ணாநகர் பகுதியில் வசிக்கும் ராம்நாத் என்பவரிடம் போதை மாத்திரையை வாங்கியது தெரியவந்தது. இதுகுறித்து வழ க்கு பதிந்த போலீசார் ராம்நாத் மற்றும் ஆஷிக் பாஷா இருவரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த 18 போதை மாத்திரைகள், மருந்து பாட்டில்கள், ஊசி, கஞ்சா ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் தலைமறைவாக இருக்கும் உலகநாதன், பிரசன்னா, அன்சாரி ஆகிய மூன்று பேரையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Categories

Tech |