ரேஷன் கடைகளில் தாங்கள் விரும்பும் பொருட்களை மட்டும் மக்கள் வாங்கலாம் என மத்திய உணவு மற்றும் பொது விநியோகத் துறை செயலர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்திற்கு மத்திய உணவு மற்றும் பொது விநியோகத் துறை செயலர் சுதான்சு பாண்டே வந்துள்ளார். இவர் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டத்திலும் செயல்பட்டு வரும் ரேஷன் கடைகள் மற்றும் மக்கள் அங்கன்வாடிகளை ஆய்வு செய்து வருகிறார். அதை போல் நேற்று ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமேஸ்வரம் பாரதி நகர் பகுதியில் அமைந்துள்ள அங்கன்வாடி மையத்திற்கு சென்றார். பின்னர் அங்கு அத்தியாவசிய உணவுப் பொருள்களின் தரம் மற்றும் இருப்பு குறித்து ஆய்வு செய்தார்.
இதனையடுத்து அவர் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது. தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் மக்களுக்கான அத்தியாவசிய பொருட்களை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். மேலும் பொருட்களை வாங்க மக்களை கட்டாயப்படுத்த கூடாது. அவர்கள் விரும்பும் பொருட்களை மட்டும் வாங்க அனுமதிக்க வேண்டும். அதனை மீறி கட்டாயப்படுத்தினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.