Categories
மாநில செய்திகள்

ALERT: ஆன்லைன் லோன் ஆப் மோசடி…. ஐடி வாலிபரின் விபரீத முடிவு….. பெரும் சோகம்…..!!!!!

சென்னை கே.கே.நகர் பாரதிதாசன் காலனியில் வசித்து வருபவர் டெய்லர் சீனிவாசராஜா(53). இவருக்கு நரேந்திரன்(23) மற்றும் கீர்த்தனா ஆகிய 2 பிள்ளைகள் இருக்கின்றனர். இதில் நரேந்திரன் பிகாம் படித்து முடித்துவிட்டு பெருங்குடியிலுள்ள ஐடி கம்பெனியில் பணியாற்றி வந்தார். சென்ற 3 மாதங்களுக்கு முன்னதாக நரேந்திரன் ஆன்லைன் லோன்ஆப் வாயிலாக ரூ.33 ஆயிரம் கடனாக பெற்றுள்ளார். இதையடுத்து கடன்ஆக பெற்ற ரூ.33 ஆயிரத்தை நரேந்திரன் திருப்பி செலுத்தியுள்ளார். அதன்பின் மீண்டுமாக ரூ.33 ஆயிரம் கடன் செலுத்த வேண்டுமென்று ஆன்லைன் லோன்ஆப் மோசடி கும்பல் பலமுறை போன் செய்ததால் நரேந்திரன் அதிர்ச்சியடைந்துள்ளார்.

அதனை தொடர்ந்து ஆபாசமாக பேசி பணத்தை திருப்பிகேட்டு தொல்லை கொடுத்து வந்ததால் நரேந்திரன் அவரது தந்தையிடமிருந்து 50ஆயிரம் பெற்று செலுத்தி இருக்கிறார். எனினும் மீண்டும் 50 ஆயிரம் செலுத்த வேண்டும் என லோன் ஆப்பில் இருந்து நரேந்திரனுக்கு போன் செய்து தொந்தரவு கொடுத்துள்ளனர். இதன் காரணமாக நரேந்திரன் மற்றொரு லோன்ஆப்பில் இருந்து கடன் பெற்றுள்ளார். இதேபோன்று சென்ற 15 நாட்களுக்குள் பல லோன் ஆப்பிலிருந்து சுமார் 80 ஆயிரம் ரூபாய் வரை நரேந்திரன் கடன் பெற்றுள்ளார். இதை கட்ட முடியாமல் திணறிய நிலையில் நரேந்திரனின் புகைப்படத்தை மார்பிங் செய்து அவரது செல்போன் தொடர்பிலிருந்த பெண்களுக்கு அனுப்பி நரேந்திரனை கடனை செலுத்த கூறி மிரட்டியுள்ளனர்.

இந்நிலையில் நேற்று காலை நரேந்திரனின் பெற்றோர் வெளியே சென்ற நிலையில், அவர் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இந்நிலையில் நரேந்திரனின் தாயாருக்கு மோசடிநபர்கள் போன் செய்து மகனை கடனை செலுத்த சொல்லி மிரட்டி இருப்பதாக தெரிகிறது. அதன்பின் அவர் நரேந்திரனை தொடர்பு கொண்டுள்ளார். அப்போது அவர் போன் எடுக்காததால் சந்தேகம் அடைந்து அவரது உறவினரை வீட்டிற்கு சென்று பார்க்க கூறியுள்ளார். அங்கு சென்று பார்த்தபோது நரேந்திரன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இது தொடர்பாக தகவலறிந்த எம்ஜி.ஆர் நகர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து நரேந்திரனின் உடலை கைப்பற்றி ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Categories

Tech |