Categories
மாநில செய்திகள்

9 ஆண்டுகளாக இவர்கள் வாடுகிறார்கள்…. இதற்கு முழு காரணம் தமிழக அரசே….. அன்புமணி ராமதாஸ் கோரிக்கை…..!!!!

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பாமக தலைவர்  அன்புமணி ராமதாஸ் கடந்த திங்கட்கிழமை அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளார். அதில் நமது தமிழ்நாட்டில் நெட்  தேர்வு எழுதி அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு  மீண்டும் போட்டி தேர்வு நடத்தி பணி நியமனம் வழங்கப்படும் என நமது தமிழக அரசு அறிவித்திருக்கிறது. இதனால் அவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் போராடுவது நியாயமான கோரிக்கையை வலியுறுத்தி தான். ஆனால் அதற்கு அரசு பதில் அளிக்காது மிகவும் ஏமாற்றத்தை அளிக்கிறது. மேலும் நமது தமிழ்நாடு முழுவதும் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நெட்  தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஆனால் அவர்கள் கடந்த 9 ஆண்டுகளாக வேலையில்லாமல் வாடி வருகின்றனர்.

இதற்கு காரணம் எந்த வகையிலும் அவர்கள் அல்ல. கடந்த 9 ஆண்டுகளாக இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களை பணி நியமனம் செய்யாத தமிழக அரசு தான் அதற்கு முழு காரணமாகும். இந்நிலையில்  அரசாணை 149 செல்லாது என அறிவித்துவிட்டு தகுதி தேர்வில் வெற்றி பெற்ற அனைவரையும் நேரடியாக இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியில் நியமிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Categories

Tech |