செல்லப்பிராணிகளை பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்வதற்கு சீனா அதிக ஆர்வம் காட்டி வருகின்றது.
பாகிஸ்தான் நாடு கனமழை மற்றும் வெள்ளத்தினால் நிலை குலைந்து உள்ளது. மேலும் நிதி பற்றாக்குறையில் சிக்கித் தவித்து வரும் பாகிஸ்தான் தங்களது பொருளாதாரத்தை உயர்த்த பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அந்த வகையில் ஏற்றுமதியை அதிகரிக்கும் நடவடிக்கைகளை பாகிஸ்தான் அரசு தீவிரப்படுத்தியுள்ளது. இந்நிலையில் ஏற்றுமதி இறக்குமதி தொடர்பான சேவையில் அந்நாட்டு நாடாளுமன்ற கமிட்டி வர்த்தக அமைச்சகம் மற்றும் நிலைக்குழு அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். அதில், பாகிஸ்தானிலிருந்து இருந்து செல்ல பிராணிகளான நாய்கள், கழுதைகள் போன்றவைகளை இறக்குமதி செய்ய சீனா மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றது என்று நிலை குழு உறுப்பினர் ஒருவர் கூறியுள்ளார்.
அதற்கு, ஆப்கான் நாட்டில் கழுதை மற்றும் நாய்களின் விலை குறைவாக இருப்பதால் அங்கிருந்து இறக்குமதி செய்யப்பட்டு பின்னர் அதனை சீனாவுக்கு ஏற்றுமதி செய்யலாமா? என உறுப்பினர் ஒருவர் கேள்வி எழுப்பி இருந்தார். அதற்கு நிலைகுழு உறுப்பினர் பதிலளித்ததாவது “விலங்குகளுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் இருப்பதால் ஆப்கானிலிருந்து இறக்குமதி செய்வதை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளோம் என்றார். குறிப்பாக கழுதை மற்றும் நாய்களை அதிக அளவில் சீனா இறக்குமதி செய்வதற்கு காரணம் மருந்து மற்றும் இறைச்சிக்காக தான்.