Categories
கிரிக்கெட் விளையாட்டு

தூக்கம் வரல… பந்து வீச முடில… இந்திய அணி பந்து வீச்சாளர் உருக்கம்

சிறந்த பந்து வீச்சாளரான இஷாந்த் சர்மா அவரது உடல்நிலை குறித்து மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்

இந்திய அணியின் பந்து வீச்சாளரான இஷாந்த் சர்மா அவரது உடல்நிலை குறித்து பகிர்ந்துள்ளார். அதனில் “நான் மகிழ்ச்சியாக இல்லை. மிகவும் துன்பப் படுகிறேன். இரண்டு நாட்களாக உறக்கம் இல்லாமல் தவிக்கிறேன்.  எனக்கு பிடித்தாற்போல் என்னால் பந்து வீச முடியவில்லை. அணியின் நிர்வாகம் கேட்டுக்கொண்ட காரணத்தினால் மட்டுமே நான் விளையாடினேன். எனது அணிக்காக நான் எதையும் செய்வேன்.

பந்துவீச்சில் நான் மகிழ்ச்சியாக இல்லை என நான் கூறவில்லை. எனது உடல்நிலை காரணமாக நான் மகிழ்ச்சியாக இல்லை. நேற்று 40 நிமிடங்கள் மட்டுமே உறங்கி இருப்பேன். நேற்று முன்தினம் 3 மணி நேரம்தான் தூக்கம். போதுமான அளவு தூக்கம் இல்லாததால் தலைசுற்றல், தலை வலி, சோர்வு போன்றவற்றால் மிகவும் அவதிப்படுகிறேன். எனது ஆற்றலை இழந்தது போல் தோன்றுகிறது.

எவ்வளவு தூரம் நான் சரியாகி வருகிறேனோ  அவ்வளவு தூரம் களத்திலும் நான் எனது திறமையை காட்டுவேன் நன்றாக தூங்கினால் நான் மீண்டு விடுவேன்” என மிகுந்த வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |