நாடு முழுவதும் 120 மெயில் மற்றும் விரைவு ரயில்கள், அதிவேக ரயில்களாக மாற்றப்பட்டுள்ளதாக இந்திய ரயில்வே வெளியிட்டுள்ள புதிய கால அட்டவணையில் தெரிவித்துள்ளது. இந்த வருடத்திற்கான புதிய கால அட்டவணை அக்டோபர் ஒன்றாம் தேதி அமலுக்கு வந்தது. அதன்படி புதிய கால அட்டவணையின் தகவல்கள் www.Indian railways.gov.in என்ற இந்திய ரயில்வேயின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் 500 ரயில்களின் வேகம் 10 நிமிடம் முதல் 70 நிமிடம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.130 மெயில் மற்றும் விரைவு ரயில்கள் சூப்பர் பாஸ்ட் எனப்படும் அதிவிரைவு ரயில்களாக மாற்றம் செய்யப்பட்டுள்ளன என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.