தொழில்நுட்பங்கள் பெருகி மக்களுக்கு நன்மை அளித்து கொண்டிருக்கின்ற நிலையில் மற்றொரு வகையில் மோசடிகளும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. மோசடிக்காரர்கள் பலரும் தொழில்நுட்பத்தை தீய வழிகளில் பயன்படுத்தி மக்களின் பணங்களை கொள்ளையடித்து வருகின்றார்கள். அதிலும் குறிப்பாக ஆன்லைன் பரிவர்த்தனைகளில் பல்வேறு விதமான மோசடிகள் நடைபெறுவது தொடர் கதையாக இருக்கிறது. 2021- 2022-ம் வருடம் மட்டும் 1351 மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இதில் ரூபாய் 76.49 கோடியில் ரூபாய் 25.77 கோடி நஷ்டம் ஏற்பட்டிருப்பதாக கூறப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில் யூபிஐ பயன்படுத்துவரன் எண்ணிக்கை ஒருபுறம் அதிகரிக்க மறுபுறம் அதற்கு எதிரான குற்றங்களும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. நேஷனல் பேமென்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா வெளியிட்டுள்ள டேட்டாவின் படி ஆகஸ்ட் மாதத்தில் யுபிஐ பரிவர்த்தனைகள் 10.7 பிரில்லியனாக அதிகரித்திருப்பதாக கூறியுள்ளது. மக்கள் அதிக அளவில் யூபிஐ பரிவர்த்தனைகளை தொடங்கி விட்டதால் மக்கள் அதனை பாதுகாப்பான முறையில் பயன்படுத்த இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா சில பாதுகாப்பு வழிமுறைகளை வெளியிட்டு இருக்கிறது.
இது பற்றி எஸ்பிஐ அதன் ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை பகிர்ந்து இருக்கிறது. அதில் யுபிஐ பரிவர்த்தனை செய்யும்போது இந்த யுபிஐ பாதுகாப்பு உதவி குறிப்புகளை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள் எச்சரிக்கையாக இருங்கள் எனக் கூறியுள்ளது. மேலும் எஸ்பிஐ வங்கி கூறியுள்ள ஆறு பாதுகாப்பு உதவி குறிப்புகள் பின்வருமாறு,
1) பணத்தை பெறும் போது நீங்கள் யுபிஐ பின்னை உள்ளிட வேண்டியது இல்லை.
2) நீங்கள் யாருக்கு பணம் அனுப்புறீர்கள் என்பதை சரி பார்க்கவும்.
3) தெரியாத கோரிக்கையை ஏற்க வேண்டாம்.
4) உங்கள் யுபிஐ பின்னை யாரிடமும் பகிர வேண்டாம்.
5) க்யூ ஆர் மூலம் பணம் செலுத்தும் போது பயனாளிகளின் விவரங்களை எப்போதும் சரி பார்க்கவும்.
6) உங்கள் யுபிஐ பின்னை அடிக்கடி மாற்றவும்.
ஏற்கனவே sbi வங்கி அதன் வாடிக்கையாளர்களிடமிருந்து எஸ்ஓவிஏ மால்வேர் பற்றி எச்சரிக்கை விடுத்துள்ளது இந்த மால்வேர் ஒரு ஆண்ட்ராய்டு வங்கி ட்ரோஜன் மால்வேர் ஆகும். இது உங்களது தனிப்பட்ட தகவல்கள் மற்றும் வங்கி தகவல்களை திருடிவிடும். மேலும் இது பற்றி ட்விட்டரில் தேவையற்ற ஆப்களை டவுன்லோட் செய்து உங்கள் விவரங்களை திருட அனுமதிக்காதீர்கள். நம்பிக்கையான மூலங்களிலிருந்து மட்டுமே ஆட்களை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் விழிப்புடன் இருங்கள் எனக் கூறியிருந்தது. கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நம்பகமான ஆப்களை மட்டும் பதிவிறக்கம் செய்யவும் தேவையற்ற இணைப்புகளை கிளிக் செய்து பதிவிறக்கம் செய்ய வேண்டாம் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.