Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

கிடப்பில் போடப்பட்ட பணிகள்….. விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்…. பொதுமக்களின் போராட்டத்தால் பரபரப்பு….!!!

பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் உள்ள புலிவலம் பகுதியில் லாரி ஓட்டுனரான தீபக் என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று இரவு நேரத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற போது சாலை சரியில்லாததால் நிலைதடுமாறி கீழே விழுந்து காயமடைந்தார். இதனை அறிந்த பொதுமக்கள் சாலைக்கு வந்து மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது பொதுமக்கள் கூறியதாவது, கடந்த சில மாதங்களாக புலிவலம் சாலை விரிவாக்க பணியின் நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. எனவே பணியை விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் அடிக்கடி விபத்துக்கள் நடக்கிறது என கூறியுள்ளனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

Categories

Tech |