சட்டவிரோதமாக கஞ்சா கடத்தி வந்த நபரை போலீசார் கைது செய்தனர்.
தமிழக-ஆந்திர எல்லை பகுதியான காட்பாடி கிறிஸ்டியான்பேட்டை பகுதியில் இருக்கும் சோதனை சாவடியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது திருப்பதியில் இருந்து அரசு பேருந்து வேலூர் நோக்கி சென்றது. இந்த பேருந்தில் போலீசார் சோதனை நடத்தி சந்தேகப்படும்படியாக பையுடன் அமர்ந்திருந்த வாலிபரை பிடித்தனர். அவரது பையில் 4 பண்டல்களில் கஞ்சா இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.
இதனை அடுத்து அவர் திருப்பூரைச் சேர்ந்த கார்த்திக் என்பது தெரியவந்தது. இவர் கஞ்சாவை விசாகப்பட்டினத்தில் இருந்து வாங்கி வந்துள்ளார். இதுகுறித்து வழக்கு பதிந்து போலீசார் கார்த்திக்கை கைது செய்ததோடு, அவரிடம் இருந்த 8 கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.