Categories
மாநில செய்திகள்

முக்கிய வசதியை ரத்து செய்த கூகுள் நிறுவனம்… வெளியான ஷாக் நியூஸ்… அதிர்ச்சியில் பயனாளிகள்…!!!!!

கடந்த 20 வருடங்களாக கூகுள் நிறுவனம் தான் இன்டர்நெட் மற்றும் தகவல் தொழில்நுட்பத்தை ஆட்டிப்படைத்து வருகிறது. உலகம் முழுவதும் பல கோடிக்கணக்கான பயனாளிகளை கொண்டிருக்கின்ற கூகுள் நிறுவனத்தின் சில சேவைகள் பொதுமக்களிடையே அதிக அளவில் பயன்பாட்டிற்கு வராத காரணத்தினால் கூகுள் நிறுவனம் சில சேவைகளை நிறுத்தி வருகின்றது. அந்த வகையில் தற்போது கூகுள் ட்ரான்ஸ்லேட் வசதியை நிறுத்த இருப்பதாக தகவல்கள் கிடைத்திருக்கிறது. சீனாவில் கூகுள் ட்ரான்ஸ்லேட் வசதியானது கடந்த 2017 ஆம் வருடம் முதல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் அண்மைக்காலமாக சீனாவிற்கும் அமெரிக்கா தொழில்நுட்ப நிறுவனமான கூகுள் நிறுவனத்திற்கும் இடைப்பட்ட உறவில் சற்று விரிசல் ஏற்பட்டிருப்பதால் தனது சர்ச் எஞ்சினை கடந்த 2010 ஆம் வருடம் சினிமாவில் இருந்து விலகிக் கொண்டது. இதனை அடுத்து கூகுள் தனது சேவைகளில் சிலவற்றையும் நிறுத்த ஆரம்பித்துள்ளது. அதிலும் குறிப்பாக gmail, google maps உள்ளிட்ட சேவைகள் நிறுத்துவதற்கான முயற்சியை மேற்கொண்டுள்ளது. இந்த நிலையில் கூகுள் டிரான்ஸ்லேட் வசதி சீனாவில் குறைந்த அளவை பயன்படுத்தி வருவதனால் இதனை ரத்து செய்ய இருப்பதாக கூகுள் நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இந்த நிலையில் கடந்த செப் 30ம் தேதி முதல் இதன் சேவைகள் கிடைக்கவில்லை என சீன சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகி உள்ளது. அத்துடன் கூகுள் ட்ரான்ஸ்லேட் சேவையை பெற டிபிஎம் வைத்திருந்தால் மட்டுமே முடியும் என்ற நிலைமைக்கு சீன பயணர்கள் தள்ளப்பட்டுள்ளனர். இதனை அடுத்து தற்போது கூகுள் குரோமில் உள்கட்டமைக்கப்பட்ட மொழிபெயர்ப்ப அம்சமான கூகுள் ட்ரான்ஸ்லேட் இனி சீனாவில் செயல்படாது.

Categories

Tech |