டிஜிட்டல் இந்தியா திட்டம் குறித்து 3 நாட்கள் மாநாடு நடைபெற்றுள்ளது.
மத்திய தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தலைமையில் கடந்த 1-ஆம் தேதி முதல் 3-ஆம் தேதி வரை டிஜிட்டல் இந்தியா திட்டம் குறித்து மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் ஆந்திரம், அசாம், பீகார், மத்திய பிரதேசம், குஜராத், கோவா, மணிப்பூர், உத்தரகண்ட், தெலுங்கானா, மிசோரம், புதுச்சேரி உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை சேர்ந்த தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர்கள் கலந்து கொண்டனர். அப்போது பேசிய மத்திய அமைச்சர் அடுத்து 15 மாதத்தில் புதிதாக 24 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொலைபேசி டவர்களை அமைக்க 26 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்க ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.