உலகில் உள்ள மிகப் பிரபலமான நிறுவனம் டெஸ்லா. இதன் உரிமையாளர் உலகின் நம்பர் ஒன் பணக்காரரான எலான் மஸ்க் ஆவார். இவர் பல்வேறு துறைகளில் முதலீடு செய்து அதில் வெற்றியும் கண்டு வருகிறார். இவர் சமீபத்தில் ட்விட்டர் நிறுவனத்தை வாங்குவதாக அறிவித்திருந்த நிலையில், டுவிட்டர் நிறுவனத்திற்கும், மஸ்க்குக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அந்த ஒப்பந்தம் பாதியிலேயே கைவிடப்பட்டது. இதனையடுத்து மஸ்க் டெஸ்லா நிறுவனத்தை போன்று, ஸ்பேஸ் எக்ஸ் என்ற நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். அதன் பிறகு டெஸ்லா நிறுவனம் சார்பில் எலக்ட்ரிக் கார்கள் தவிர, டெஸ்லா செங்கல், சோலார் பேனல், பிக்கப் ட்ரக், நான்கு சக்கர வாகனம் மற்றும் எலக்ட்ரிக் டிரக் போன்ற வாகனங்களும் விற்பனை செய்யபடுகிறது.
இந்நிலையில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வண்ணமாக மஸ்க் அடுத்த கட்டமாக ஒரு புதிய முயற்சியை எடுத்துள்ளார். அதாவது எந்திரன் படத்தில் வருவதைப் போன்று எலான் மஸ்க்கும் ஒரு மனித ரோபோவை வடிவமைத்துள்ளார். இது SUPER HUMANOID ROBAT தயாரிப்பு என்று அழைக்கப்படுகிறது. இந்த மனித ரோபோக்கள் தற்போது சோதனை செய்யப்பட்டு வருகிறது. இந்த சோதனை முடிவடைந்த பிறகு மனித ரோபோக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்று மஸ்க் கூறியுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பாக எலான் மஸ்க் ஒரு நிகழ்ச்சியில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது எலான் மஸ்க் நிறுவனம் தயாரித்த ரோபோ மேடையில் சட்டென வந்து மனிதர்களை போன்று எலானுக்கு சைகை காட்டி நடனம் ஆடியது.
இது அங்கிருந்தவர்களை மிகவும் வியப்பில் ஆழ்த்தியது. அதன்பின் மனித ரோபோக்கள் குறித்து எலான் மஸ்க் பேசினார். அவர் கூறியதாவது, எந்திர ரோபோக்களின் சோதனை பிப்ரவரி மாதம் முதல் தொடங்கியுள்ளது. தற்போது மேடையில் தோன்றிய ரோபோட் பெயர் ஆப்டிமஸ். இது எந்த ஒரு ரிமோட் கண்ட்ரோல் இல்லாமல் தானாகவே நடந்து வந்து சைகை காட்டி நடனமாடியது. இதேபோன்று மில்லியன் கணக்கில் எங்களால் ஆப்டிமஸ் ரோபோட்க்களை உருவாக்க முடியும். இந்த ரோபோட்கள் பயன்பாட்டுக்கு வரும்போது ஒரு ரோபோட்டின் விலை 20000 டாலர்கள் என்று விற்பனை செய்யப்படும்.
இதற்கான ஆர்டர் அடுத்த 3 வருடங்கள் அல்லது 5 வருடங்களில் தயாராகிவிடும். இந்த ரோபோட்களை மேம்படுத்துவதற்கு பல்வேறு விஷயங்கள் இருப்பதால் இன்னும் 5 அல்லது 10 வருடங்களில் மனிதர்களை வியக்கத்தக்க விதமாக பல்வேறு விதமான ஆச்சரியங்களை ஏற்படுத்தும். அதோடு பெண் வடிவத்திலான ரோபோட்களும் தயார் செய்யப்பட்டு வருகிறது. இந்த ரோபோட்கள் மூலம் எதிர்காலம் வேறு மாதிரியாக இருக்கும் என்று கூறினார். மேலும் மனித ரோபோட்டுகள் எலான் மஸ்கின் தன்னம்பிக்கையை காட்டினாலும் எதிர்காலம் எப்படி இருக்கும் என்று ஆவலும் அதிகரித்துள்ளது.
— Tesla (@Tesla) October 1, 2022