மசாலா சாதம்
தேவையான பொருட்கள்
செய்முறை
முதலில் முட்டையை ஆம்லெட் போட்டு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
தக்காளி மற்றும் வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைக்கவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி கிராம்பு சோம்பு பட்டை வத்தல் போன்றவைகளைப் போட்டு தாளித்து அதனுடன் வெங்காயத்தையும் சேர்த்து நன்றாக வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கி நிறம் மாறியதும் தக்காளியையும் சேர்த்து தக்காளி கரையும் வரை நன்றாக வதக்கவும்.
அதனுடன் பிரியாணி மசாலா உப்பு மற்றும் தயிர் சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும் வரை நன்றாக வதக்கவும்.
வதங்கிய பின்னர் வெட்டி வைத்துள்ள ஆம்லெட் துண்டுகளை போட்டு தண்ணீர் தெளித்து முட்டையில் மசாலா சேரும்படி கிண்டி விடவும்.
சிறிது நேரம் காத்திருந்து பின் சாதத்தையும் அதனுடன் சேர்த்து நன்றாக கிளறவும்.
இறுதியாக கொத்தமல்லி இலை போட்டு இறக்கி விடவும்