Categories
சினிமா தமிழ் சினிமா

சுந்தர். சி இயக்கிய ”காஃபி வித் காதல்”…. படத்தின் ரிலீஸ் ஒத்திவைப்பு….?

‘காஃபி வித் காதல்’ படத்தின் ரிலீஸ் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் சுந்தர். சி. இவர் இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் ”காஃபி வித் காதல்”. இந்த படத்தில் ஜீவா, ஸ்ரீகாந்த், சம்யுக்தா, டிடி, ரைசா, யோகி பாபு மற்றும் பலர் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படம் அக்டோபர் 7ம் தேதி ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

coffee_with_kadhal_yt_ss

இந்நிலையில், இந்த படத்தின் ரிலீஸ் தற்போது ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் காரணத்தால் இந்த படத்துக்கு திரையரங்குகள் கிடைப்பதில் சிக்கல் இருப்பதால் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

Categories

Tech |