Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மீண்டும் இவர்கள் அனைவருக்கும் பென்ஷன்….. அமைச்சர் வெளியிட்ட செம ஹேப்பி நியூஸ்….!!!!

விருதுநகர் மாவட்ட அருப்புக்கோட்டையில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி மற்றும் வருவாய் துறை சார்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் 150 கற்பிணி பெண்களுக்கு வருவாய் துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் ஊட்டச்சத்து பொருட்களையும், வளைகாப்பு பொருட்களும் வழங்கினார். அதனை தொடர்ந்து வருவாய் துறை சார்பில் 141 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா, மின்னணு குடும்ப அட்டை, ஆதரவற்ற விதவை சான்று, சாலை விபத்து நிவாரண உதவி தொகை ரூ.20,29,600 மதிப்பில் நலத்திட்ட உதவிகளையும் வருவாய் துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் வழங்கினார் அதன் பிறகு நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், வீட்டில் வளைகாப்பு நடத்த முடியாதவர்களுக்கு சகோதரனாக இருந்து முதல்வர் வளைகாப்பு நடத்துகிறார். பிரச்சனை இல்லாத வீடுகள் இல்லை. பிரச்சினையை தள்ளிவிட்டு பிரசவ காலத்தில் நல்ல மனநலத்துடன் இருக்க வேண்டும்.

அப்போதான் பிறக்கும் குழந்தை ஆரோக்கியமாக இருக்கும். பிறக்கும் குழந்தை ஆணாக, பெண்ணாக இருந்தாலும் கவலை வேண்டாம். பெண்கள் தான் அனைத்து போட்டிகளிலும் ஜெயிக்கிறார்கள். எந்த குழந்தையாக இருந்தாலும் அது நம்முடைய குழந்தைகள். மேலும் சாதி, மதத்திற்கு அப்பாற்பட்டு எனக்கு வாக்களித்துள்ளீர்கள் உங்களை மனப்பூர்வமாக வாழ்த்துகிறேன். இதனையடுத்து இதுவரை 4,92,000 முதியோர் பென்ஷன் வழங்கியுள்ளோம். முதியோர் பென்ஷன் வாங்கும் நபர்களை நீக்கி இருக்கிறோம் என்ற கேள்வி எழுந்து உள்ளது. அனைத்து ஆட்சியிலும் தகுதி இல்லாதவர்களை நீக்கம் செய்வது வழக்கமான ஒன்றுதான். தற்போது தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள ஓய்வுதிதாரர்களுக்கு மீண்டும் ஆய்வு செய்து தகுதியுடைய அனைவருக்கும் மீண்டும் ஓய்வூதிய வழங்கப்படும். எல்லோருக்கும் எல்லாம் வழங்கக்கூடிய ஆட்சி தான் திமுக ஆட்சி என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |