ஜெர்மன் மாகாண தலைவர்கள் ஜெர்மனி இணைந்ததால் உருவான வெற்றிகளை ஆற்றல் பிரச்சனை அபாயத்திற்கு உள்ளாகி வருவதாக சமீபத்தில் 4000 மக்களிடையே மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்று கிழக்கு ஜெர்மனி பகுதியில் வாழ்பவர்களின் 39 சதவீதத்தினர் மட்டுமே ஜெர்மனியில் நடைபெறும் மக்களாட்சி திருப்திகரமாக இருப்பதாக கூறியுள்ளார்கள். இந்த நிலையில் இரண்டு வருடங்களுக்கு முன் இந்த எண்ணிக்கை 9 புள்ளிகள் அதிகமாக இருந்துள்ளது. மேற்கு ஜெர்மனியிலோ திருப்தி குறைந்திருந்தாலும் 65 சதவீதத்திலிருந்து 59 சதவீதமாக மட்டுமே குறைந்திருக்கிறது அதேபோல் கிழக்கு ஜெர்மனியில் 26 சதவீதத்தினர் மட்டுமே பெடரல் அரசின் தற்போதைய கொள்கைகள் திருப்திகரமாக இருப்பதாக கூறியுள்ளனர்.
மேலும் கிழக்கு ஜெர்மனியில் 23 சதவீதத்திலும் மேற்கு ஜெர்மனியில் 33 சதவீதத்திலும் மட்டுமே நாட்டின் சமூக நீதி திருப்தி அளித்திருப்பதாக கூறியுள்ளனர். இந்த நிலையில் சமீபத்தில் விழா ஒன்று தொடர்பாக ஒன்று கூடிய கிழக்கு ஜெர்மன் மாகாண தலைவர்கள் ஜெர்மனி இணைந்து தான் உருவான வெற்றிகளை தற்போதைய ஆற்றில் பிரச்சனை இழக்க செய்து விடுமோ என கிழக்கு ஜெர்மனியில் வாழும் மக்கள் பலர் கவலை அடைந்து இருப்பதாக தெரிவித்துள்ளனர்.