பொருளாதாரத்தில் நலிவடைந்த திறமையான மாணவர்கள், எட்டாம் வகுப்பில் பள்ளி படிப்பை பாதியிலேயே நிறுத்தி விடும் மாணவர்கள் மீண்டும் கல்வியை தொடரும் நோக்கத்தில் தேசிய அளவிலான தகுதி மற்றும் திறமையான மாணவர்களுக்கான உதவித்தொகை வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. ஒவ்வொரு வருடமும் சுமார் ஒரு லட்சம் புதிய மாணவர்களுக்கு இந்த திட்டத்தின் மூலமாக உதவி தொகை வழங்கப்படுவதன் மூலம் அவர்கள் ஒன்பதாம் வகுப்பில் பள்ளி படிப்பை தொடர முடியும்.
இந்த மாணவர்களுக்கு வருடத்திற்கு பன்னிரண்டாயிரம் உதவி தொகை வழங்கப்படும். இந்த திட்டத்தின் கீழ் மாணவர்களின் வங்கி கணக்கில் நேரடியாகவே உதவி தொகை செலுத்தப்பட்டு விடும். இந்த திட்டம் நூறு சதவீதம் மத்திய அரசு மட்டுமே வழங்கப்படுகிறது. இந்த நிலையில் இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் அக்டோபர் 15ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.